ஒடிசாவில் தலித் ஆண்களை விலங்குகள் போல நடக்க வைத்து கொடுமை

ஒடிசா மாநிலம் கஞ்சாம் மாவட்டத்தில் மாடுகளை கடத்தி செல்வதாக சந்தேகித்து தலித் ஆண்கள் இருவரை கொடுமை படுத்திய சம்பவம் நடந்துள்ளது.

சிங்கிபுரத்தைச் சேர்ந்த பாபுலா நாயக் (52), புலு நாயக் (42) இருவரும் இரண்டு மாடுகள் மற்றும் கன்று குட்டியை தங்களது கிராமத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அப்போது அங்கு வந்த சில மாடுகளை கடத்தி செல்வதாக சந்தேகித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவர்களிடம் ரூ.30,000 கேட்டதாகவும் கூறப்படுகிறது.

அவர்கள் பணம் தர மறுத்ததால் இருவரும் ஒரு சலூனுக்கு அழைத்து செல்லப்பட்டு அவர்களது தலை முடி பாதியாக வெட்டப்பட்டது. பிறகு ஒரு கிலோமீட்டர் தூரம் முழுவதும் முழங்காலில் நடக்க வைக்கப்பட்டு கொடுமை படுத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆறு பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

Related News

Latest News