பெண் பயணியை தாக்கிய ராபிடோ பைக் டாக்சி ஓட்டுநர்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ராபிடோ பைக் டாக்சி ஓட்டுநர் ஒருவர் பெண் பயணியை தாக்கும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பயணத்தின் போது ஓட்டுநரின் வேகமாக பைக் ஓட்டுவதை எதிர்த்து அந்த பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து அந்த பெண் கட்டணம் மற்றும் ஹெல்மெட் திருப்பி கொடுக்க மறுத்ததால், ஓட்டுநர் பெண்ணை தாக்கியுள்ளார். இதனால் அவர் கீழே விழுந்தார்.

கர்நாடகத்தில் பைக் டாக்சி சேவைகள் சட்ட ரீதியாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகள் மற்றும் ஓட்டுநர்கள் இடையே ஏற்பட்ட சில சம்பவங்கள் விவாதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

Related News

Latest News