Wednesday, July 30, 2025

“கீழே விழப்போகிறோம்” விபத்துக்கு முன் விமானி கூறிய கடைசி வார்த்தை

குஜராத்தின் அகமதாபாத்தில் விமானம் விபத்துக்குள்ளான கடைசி நொடியில் விமானி பேசிய வார்த்தைகள் குறித்த விவரங்கள் கிடைத்திருக்கின்றன.

குஜராத் மாநிலத்தில் 242 பயணிகளுடன் அகமதாபாத்தில் இருந்து லண்டன் கிளம்பிய விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர விபத்தில் ஒரேயொரு பயணி தவிர 241 பேரும் உடல் கருகி உயிரிழந்தனா். 

இந்நிலையில், விமானம் விபத்துக்கு முன் இறுதி நொடியில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு விமானி விடுத்த கடைசி தகவல் என்னவென்பது குறித்த தகவல்கள் அதிகாரபூர்வமாகக் கிடைத்திருக்கின்றன.

விமானம் விபத்துக்குள்ளாகும் போது கடைசி நொடியில் விமானி “மேடே.. மேடே.. மேடே.. நோ பவர்.. நோ த்ரஸ்ட்.. கீழே விழப்போகிறோம்” (Mayday.. Mayday.. Mayday.. No Power.. No thrust.. Going Down) எனக் கூறியிருக்கிறார்.  இதன்கூடவே, நோ பவர் என மின்சாரம் இல்லாததையும் விமானி கடைசி நொடியில் கூறியிருக்கிறார். அதேபோல் No thrust என்கிற வார்த்தையையும் விமானி கூறியிருக்கிறார்.

MayDay என்பது அவசர காலத்தில் உதவிக்காக விமானங்களின் விமானிகள் பயன்படுத்தி வரும் ரகசிய வார்த்தைதான் இது. விமானத்தைக் கட்டுப்படுத்த முடியாத நிலை போன்ற உயிருக்கே ஆபத்தான மிகவும் அவசர காலத்தில் விமானிகள் இந்த வார்த்தையை பயன்படுத்துவார்கள்.

விமானத்தில் மின்சாரம் இல்லாமல் போனதற்கும் இன்ஜினில் உந்துவிசை கிடைக்காமல் போனதற்கும் காரணம் என்ன? என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
Latest News