Saturday, April 19, 2025

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கணவன்…மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை

உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் ரியல் எஸ்டேட் டீலர் குல்தீப் தியாகி (46). இவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று இரவு வீட்டில் வைத்திருந்த துப்பாக்கியால் மனைவியை சுட்டுள்ளார். பிறகு அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அருகில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் “நான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். என்னால் நீண்ட நாட்கள் வாழ முடியாது. என் மருத்துவ சிகிச்சைக்காக பணம் வீணடிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. நானும் என் மனைவியும் எப்போதும் ஒன்றாக இருப்போம் என்று சபதம் செய்துள்ளதால், என் மனைவியை என்னுடன் அழைத்துச் செல்கிறேன்.” என அதில் எழுதி உள்ளார்.

Latest news