BSNL புதிய Broadband ஆஃபர்… தவறவிடாதீர்கள்!!

மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். (BSNL), கிராமப்புற பயனர்களுக்காக வெறும் ரூ. 1,449 விலையில் ஆறு மாத கால பிராட்பேண்ட் திட்டத்தை வழங்குகிறது.

‘ரூரல் என்ட்ரி பிளான்’ எனப்படும் இந்த திட்டம், குறைந்த செலவில் இணைய சேவையை பெற விரும்புவோருக்கு ஏற்றதாகும்.

இதே திட்டம் ஒரு மாதத்திற்கு ரூ. 259-க்கும் கிடைக்கிறது. ஆனால் ஆறு மாத திட்டத்தைத் தேர்வு செய்தால், மாதத்திற்கு சராசரியாக ரூ. 241 மட்டுமே செலவாகும்.

இருப்பினும், குறிப்பிடப்பட்ட கட்டணத்திற்கு வரிகள் கூடுதலாக வசூலிக்கப்படும். இந்த திட்டத்தில் 25 Mbps வேகத்தில் 700GB வரை டேட்டா வழங்கப்படுகிறது.

நியாயமான பயன்பாட்டு கொள்கை (FUP) வரம்பை கடந்த பிறகு, இணைய வேகம் 2 Mbps ஆக குறைக்கப்படும். மேலும், லேண்ட்லைன் மூலம் வரம்பற்ற வாய்ஸ் காலிங் வசதியும் இதில் வழங்கப்படுகிறது.

அதற்காக வாடிக்கையாளர்கள் தனியாக லேண்ட்லைன் கருவியை வாங்க வேண்டும். கூடுதலாக, பிரசார் பாரதியின் WAVES பிரீமியம் OTT சேவையையும் இந்த திட்டத்துடன் இலவசமாக பயன்படுத்த முடியும்.

கிராமப்புறங்களில் பிராட்பேண்ட் சேவையின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் பி.எஸ்.என்.எல். இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறைந்த விலையில் நீண்ட கால இணைய வசதி மற்றும் கூடுதல் OTT சேவையை விரும்பும் பயனர்களுக்கு இந்த திட்டம் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

Related News

Latest News