பெண்கள் இலவச பயணம்: கண்டக்டர்களுக்கு முக்கிய அறிவுரை…

தமிழகம் முழுவதும் அரசு பஸ்களில் பெண்கள், சிறுமிகள் மற்றும் திருநங்கைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் முதலமைச்சர் விஜயால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ஏ.சி. பஸ்களைத் தவிர மற்ற அனைத்து அரசு பஸ்களிலும் இந்த இலவச பயண வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் அரசு பஸ்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, பயணிகளிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்களுக்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுரைகள் வழங்கியுள்ளனர். குறிப்பாக, கண்டக்டர்கள் பயணிகள் இருக்கும் இடத்திற்குச் சென்று டிக்கெட் வழங்க வேண்டும். இலவச பயணம் என்ற அலட்சியம் காட்டாமல், பயணிகளிடம் கனிவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பயணிகள் ஏறி, இறங்கிய பின்னர் கதவுகளை மூட வேண்டும். பஸ்களை உரிய இடத்தில் நிறுத்தி பயணிகளை பாதுகாப்பாக ஏற்றி, இறக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுமார் 7 ஆயிரம் ஊழியர்களுக்கு 4 மையங்களில் பயிற்சி வழங்கப்பட்டதுடன், பணிமனைகளிலும் ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related News

Latest News