போலீஸ்ன்னா ‘வாடா போடா’ன்னு கூப்பிடுவீங்களா? டென்ஷன் ஆன நீதிபதி… நடு நடுங்கிய போலீஸ்

165
Advertisement

Give respect take respect-ங்குற வார்த்தைய சமீப காலமா அதிகளவுல கேட்ருப்போம். அதாவது மரியாதைய கொடுத்து மரியாதையை வாங்கு, அப்படிங்குறதுதான் இதோட அர்த்தம். இந்த ஜனநாயக நாட்டில உயர்ந்தவன், தாழ்ந்தவனு யாரும்
இல்ல. எல்லாருமே சமம் என்கிறது நமது சட்டம். ஆனா எதார்த்தத்துல இன்னமும் சில இடங்கள்ல அரசு
அலுவலர்கள், போலீஸ்க்காரங்க, தங்களுக்கு கீழ் பணியாற்ற கூடியவர்களையோ அல்லது புகார் கொடுக்க வர்ற பொதுமக்களையோ தங்களோட கடுமையான வார்த்தைகளால அவமானப்படுத்தக்கூடிய நிலை இன்னமும் இருக்கத்தான் செய்யுது. அதற்கு சான்றாகதான் அமைந்திருக்கு கேரள மாநிலத்துல நடந்திருக்கக்கூடிய ஒரு தரமான சம்பவம்.
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்த வழக்கறிஞர் அக்விப் சுகைல் என்பவர் விபத்துல சிக்கின ஒரு வாகனத்தை மீட்பதற்காக நீதிமன்ற உத்தரவுடன், பாலக்காடு மாவட்டத்தில் இருக்க ஆலத்தூர் காவல் நிலையத்திற்கு போயிருக்கார்.
அப்போ, அங்க இருந்த காவல்நிலைய எஸ்.ஐ. ரினிஷ் என்பவர், அந்த வழக்கறிஞரை தரம் தாழ்ந்த வார்த்தைகளால
திட்டியிருக்காரு. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்கள்ல வைரலானதை தொடர்ந்து, எஸ்.ஐ ரினிஷுக்கு எதிரா கேரள உயர்நீதிமன்றத்துல அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுச்சு. இந்த வழக்க விசாரிச்ச நீதிபதி தேவன் ராமச்சந்திரன், இதுதொடர்பா எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கேரள டிஜிபி ஷேக் தர்வேஷ் சாகிப்பிடம் விளக்கம் கேட்க, அதற்கு அவர் எஸ்.ஐ ரினிஷை
எச்சரித்ததோடு அவர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுவிட்டதாவும் தெரிவிச்சிருக்காரு. இத கேட்ட நீதிபதி, இதுக்கு முன்னாடி பணிபுரிஞ்ச காவல் நிலையத்துல பொதுமக்கள் கிட்ட அவமரியாதையா நடந்துக்கிட்டதுனாலதான், அங்க இருந்து ஆலத்தூருக்கு
மாற்றப்பட்டிருக்காரு. ஆனாலும், அவர் திருந்தல. அதனால… இடமாற்றம் செய்றதுலாம் சரிப்பட்டு வராதுன்னும், இந்த
மாதிரி செயல்கள்ல ஈடுபடக்கூடிய போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படனும்னும் நீதிபதி உத்தரவிட்டிருக்காரு. அதுமட்டுமில்ல, இது ஜனநாயக நாடுன்னும், இங்க பொதுமக்கள்தான் எஜமானர்கள்னும் அழுத்தம் திருத்தமா சொன்ன நீதிபதி தேவன் ராமச்சந்திரன், யாரையும் ‘வாடா, போடா, நீ’ என்று அழைக்கக்கூடாதுனும், இதுதொடர்பா போலீசாருக்கு சுற்றறிக்கை அனுப்புமாறும் டிஜிபிக்கு உத்தரவிட்டிருக்காரு. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து, பாதிக்கப்பட்டவருக்கு நீதி கிடைச்சிருக்கு. ஆனா இன்னமும், நம்ப ஊரு காவல் நிலையங்கள்ல, அரசு மருத்துவமனைகள்ல, அரசு அலுவலகங்கள்ல பொதுமக்கள்ல வா போ நீன்னு மதிக்காத நிலை இருக்கத்தான் செய்யுது. இந்த நிலை மாறனும்னா நாம ஒவ்வொருத்தரும் மனிதர்களை சக மனிதர்களா மதிச்சா போதும்….

give respect- take respect…….

-ராஜேஸ்வரி