ஓய்வுபெறும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு இரவு விருந்து அளித்தார் பிரதமர் மோடி

222

நாளையுடன் ஓய்வு பெறவுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு விருந்தளித்தார்.

ராம்நாத் கோவிந்த் கடந்த 2017ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் தேதி முதல் குடியரசுத் தலைவராக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு இன்று பிரிவு உபசார விழா நடைபெற உள்ள நிலையில், நேற்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு பிரதமர் மோடி இரவு விருந்தளித்தார். இந்த விருந்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள், பத்ம விருது பெற்றவர்கள் உள்பட பல முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றனர். மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பழங்குடியின தலைவர்களும் விருந்தில் கலந்து கொண்டு பிரதமர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.