கடந்த சில மாதங்களாக சிவசேனா, திமுக, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் சந்திரசேகர் ராவ் தொடர் சந்திப்புகளை நடத்தி வருகிறார்.
ஆனால், பாஜக மற்றும் காங்கிரசுக்கு எதிராக சக்திகளை ஒன்று சேர்க்க முடியவில்லை.
இந்நிலையில் சந்திரசேகர் ராவ் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் மிக முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்த ஆலோசனை சுமார் 6 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது.
கூட்டத்தின் முடிவில் பாரத ராஷ்டிர சமிதி என்ற புதிய கட்சிக்கு அனைவரும் ஒருமனதாக ஒப்புக்கொண்டதாக தெரிகிறது.
மேலும் புதிய கட்சிக்கான அறிவிப்பை ஜூன் மாத இறுதிக்குள் டெல்லியில் அறிவிப்பு வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்சிக்கு தனது கட்சி சின்னமான கார் சின்னத்தையே வைக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளார் என கட்சி நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.