நாட்டின் 15-வது குடியரசு தலைவர் தேர்தலுக்கான தேதி எப்போது?

428

தற்போது குடியரசுத் தவைராக உள்ள ராம்நாத்கோவிந்தின்  பதவிக்காலம் வரும் ஜூலை -24ம் தேதி முடிவடைகிறது.

இந்நிலையில், குடியரசு தலைவர்  தேர்தலுக்கான தேதியை இன்று  பிற்பகல் 3 மணி அளவில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது.

நாட்டின் 15-வது குடியரசுத்தலைவரை தேர்ந்து எடுப்பதற்கான தேர்தல் தேதியை, டெல்லி விக்யான் பவனில் செய்தியாளர் சந்திப்பில் தலைமை தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ளது.

ராம்நாத் கோவிந்த  ஓய்வு பெறுவதற்கு முன்னதாக புதிய குடியரசுத் தலைவரை தேர்வு செய்தவற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட குறைந்தபட்சம் 35 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.

எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வாக்களித்து குடியரசுத்தலைவரை தேர்ந்தெடுப்பார்கள்.