கொடைக்கானலில் தொழில்நுட்ப கருத்தரங்கம் மூன்று நாட்கள் நடைபெறுகிறது.
இதில் கலந்து கொண்டு பேசிய இந்திய விண்வெளி ஆய்வு மைய விஞ்ஞானி ரமேஷ், இந்திய ஆராய்ச்சி துறையில் புதிய மைல் கல்-ஆக சூரியனைப் பற்றி ஆய்வு செய்வதற்காக ஆதித்யா என்ற விண்கலம் அடுத்த ஆண்டில் ஜூன் மாதத்தில் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த விண்கலம், சூரியனைப் பற்றிய பல்வேறு புதிய ஆய்வுகள் செய்ய உபயோகமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சூரியனுக்கும் பூமிக்கும் 150 மில்லியன் கிலோ மீட்டர் தூரம் உள்ளதாக கூறிய விஞ்ஞானி ரமேஷ், பூமியிலிருந்து 1.5 மில்லியன் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள லெக் ராஜியன் பாயிண்ட் பகுதியில் இருந்து சூரியனை ஆய்வு செய்ய விண்கலத்தை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.
அமெரிக்கா போன்ற நாடுகள் கூட, லெக் ராஜியன் பாயிண்ட் பகுதியில் விண்கலத்தை இதுவரை நிறுத்தவில்லை என்றும் விஞ்ஞானி ரமேஷ் தெரிவித்தார்.