ஐதராபாத்தில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த 6வது முக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்,AIMIM கட்சியை சேர்ந்த MLA மகன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட 6 பேரில் 5 பேர் 18வயது பூர்த்தியாகாத சிறுவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கைதான ஒருவர் மட்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுவர்கள் 5 பேரும் சிறார் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு கார்களையும் பாலீசார் கைப்பற்றினர்.