கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்து விழுந்து விபத்து

349

கேரளாவில் கால்பந்தாட்டத்தின் போது கேலரி உடைந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 10க்கும் மேற்பட்ட பார்வையாளாகள் காயம் அடைந்தனர்.

மலப்புரம் மாவட்டம் பூக்கெட்டும்படாம் அரசு பள்ளியில் நடந்த கால்பந்து ஆட்டத்தை காண மூங்கில் மற்றும் தென்னம் பலகைகளை கொண்டு நான்கு அடுக்குகள் கொண்ட தற்காலிக கேலரி அமைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பாரம் தாங்காமல் கேலரி திடீரென இடிந்து விழுந்தது.

இதில் பார்வையாளர்கள் பலர் படுகாயம் அடைந்தனர்.

காயம்அடைந்தவர்கள் மீட்கப்பட்டு, அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.