காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதல்கள் சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.
இந்த விவகாரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், காஷ்மீரில் கடந்த 1990-களில் இருந்த நிலை மீண்டும் திரும்புகிறது என்றும் காஷ்மீர் பண்டிட்டுகள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும் கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
பா.ஜ.க-வால் காஷ்மீரை கையாள முடியாது என்றும், தயவு செய்து காஷ்மீர் விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் காஷ்மீர் பண்டிட்டுகளின் பாதுகாப்பை உறுதி செய்து, அவர்களது கோரிக்கையை நிறைவேற்றுமாறும் அவர் வலியுறுத்தினார்.