குரங்கு அம்மை பாதித்தவர்களையும், மொத்தமாக பாதித்த இடங்களையும் விரைவாக அடையாளம் காண வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை பரவுவதை தடுக்க சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும் என்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி உள்ளது.
குரங்கு அம்மை பாதித்தவரின் தொடர்பில் இருந்தவர்களை தொற்று அறிகுறி ஏற்பட்டதில் இருந்து 21 நாட்களுக்கு நாள்தோறும் கண்காணிக்க வேண்டும் என்றும் நோயாளிகளுக்கும், வீட்டு தனிமையில் இருப்பவர்களுக்கும் சிகிச்சை அளிக்கும் சுகாதார பணியாளர்கள் நன்றாக கை சுத்தத்தை பராமரிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
அதேபோல், குரங்கு அம்மை பாதித்த நாடுகளுக்கு சென்று வந்து அறிகுறிகளுடன் காணப்படும் நோயாளிகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.