இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 710 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்து 530 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 2 ஆயிரத்து 296 பேர் குணமடைந்ததால், குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 7 ஆயிரத்து 117 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு மேலும் 14 பேர் பலியானதால், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 539 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்புக்கு தற்போது 15 ஆயிரத்து 814 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.