நீருக்கடியில் போக்குவரத்து
அசத்தும் அஸ்ஸாம்

481
Advertisement

இந்தியாவிலேயே முதன்முறையாக அஸ்ஸாம் மாநிலத்தில்
நீருக்கடியில் போக்குவரத்து தொடங்குவதற்கான
திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் பிரம்மபுத்திரா நதியில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதில் ரயில் மற்றும் வாகனப் போக்குவரத்துக்கான திட்டம்
7 ஆயிரம் கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

வடக்கு அஸ்ஸாமையும் அருணாசலப் பிரதேச மாநிலத்தையும்
இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதியில் 9.8 கிலோ மீட்டர்
தொலைவுக்கு 3 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படுகிறது.

2 சுரங்கப்பாதைகளில் கனரக வாகனங்களுக்கான பொதுப்போக்குவரத்தும்
மற்றொரு சுரங்கப்பாதையில் ரயில் போக்குவரத்தும் நடைபெறும்விதம்
இந்தப் போக்குவரத்துத் திட்டம் தொடங்கப்படுகிறது.