தீபாவளி சிறப்பு அரசு பேருந்துகளில் இதுவரை 2.34 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக மாநில போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
தீபாவளி பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாட, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து மக்கள் வெளியேறி வருகின்றனர்.
இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
சென்னையில் கோயம்பேடு, தாம்பரம், சானடோரியம், பெருங்களத்தூர், பூவிருந்தவல்லி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
நேற்றிரவு சென்னையில் இருந்து குடும்பம் குடும்பமாக சொந்த ஊருக்குச் செல்ல மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் திரண்டனர்.
இந்நிலையில் இதுவரை 5 ஆயிரத்து 932 சிறப்பு பேருந்துகளில் 2 லட்சத்து 34 ஆயிரத்து 918 பயணிகள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
மேலும் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 744 பேர் முன்பதிவு செய்து இன்று பயணிக்க உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.