ஜெர்மனி தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் அறிவித்துள்ளார்.
ஜெர்மனி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் சமூக ஜனநாயக கட்சிக்கு 25.7 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. பிரதமர் ஏஞ்செலா மெர்கலின் யூனியன் பிளாக் கட்சி 24.1 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்நிலையில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்களில் வெற்றிபெற்றுவிட்டதாக எதிர்க்கட்சியான இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ஒலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.
எனவே ஏஞ்செலா மெர்கல் பதவியில் நீடிக்க கூடாது என்றும் ஸ்கோல்ஸ் வலியுறுத்தி உள்ளார்.
கிரீன்ஸ், FDP ஆகிய கட்சிகளுடன் இணைந்து புதிய ஆட்சியமைப்பதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் ஒலாஃப் ஸ்கோல்ஸ் தெரிவித்துள்ளார்.