ஆண்டுக்கு 70 லட்சம் மக்கள் உயிரிழப்பு – இனியும் இதே நிலை தொடர்ந்தால்…

363
Advertisement

காற்று மாசுபாட்டால் உலகம் முழுவதும் ஆண்டுக்கு 70 லட்சம் பேர் பலியாகி வருவதாக உலக சுகாதார நிறுவனம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், காற்று மாசுபாட்டால் இதய நோய்கள், நுரையீரல் சார்ந்த பாதிப்புகள் மற்றும் நீரிழிவு நோய்கள் ஏற்படுவதாக கூறப்பட்டு உள்ளது.

இதனால், ஏழை மற்றும் வளரும் நாடுகள் அதிக பாதிப்புகளை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளது.

மனித உடல்நலத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக காற்று மாசுபாடு உருமாறி உள்ளதாக குறிப்பிட்டுள்ள அந்த அறிக்கையில், ஆண்டுக்கு 70 லட்சம் பேர் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்று மாசுபாட்டைத் தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசுகள் கண்டிப்புடன் செயல்படுத்தினால் மட்டுமே உடல்நல பாதிப்புகளிலிருந்து மனிதர்களைக் காக்க முடியும் எனவும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டு உள்ளது.