சீன விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் வியத்தகு அறிவிப்பு

341
Advertisement

விண்வெளியில் தனி ஆய்வு மையம் அமைக்கும் பணியில் ஈடுபட்ட 3 சீன வீரர்கள், 90 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக பூமிக்கு திரும்பினர்.



சீனா விண்வெளியில் தனக்கென புதிதாக தியான்ஹே என்ற ஆய்வு மையத்தை கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

ஆய்வு மையத்தை கட்டமைக்க 3 விண்வெளி வீரர்கள் சென்ஷீ 12 விண்கலம் மூலம் ஜூன் மாதம் 16-ஆம் தேதி விண்வெளிக்கு அனுப்பப்பட்டனர்.

இதனையடுத்து ஆய்வு மையத்தை கட்டமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்ட வீரர்கள், 90 நாட்களுக்கு பின் பாதுகாப்பாக மங்கோலியாவில் உள்ள கோபி பாலைவனத்தில் தரையிறங்கினர்.

இந்த ஆய்வு மையத்தை வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் சீனா பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது