கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதித்த வடகொரியா

329
Advertisement

வடகொரியா ரயிலில் இருந்தும், தென்கொரியா நீர்மூழ்கி கப்பலில் இருந்தும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்ததால் கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

வட கொரியா நீண்ட தூரம் சென்று தாக்கும் நவீன தொழில்நுட்ப ஏவுகணையை தயாரித்து சோதனையில் ஈடுபட்டு வருகிறது.

அந்தவகையில், வடகொரியா மேலும் 2 கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை ரயில்களில் இருந்து செலுத்தி வெற்றிகரமாக சோதனை செய்தன. மத்திய வடகொரியாவில் இருந்து கொரிய தீபகற்பத்தின் கிழக்கு கடல் பகுதியை நோக்கி இவை செலுத்தப்பட்டன.

இவை வெற்றிகரமாக சோதிக்கப்பட்ட அறிவிக்கப்பட்டது. இதற்கு பதிலடி தரும் வகையில், தென்கொரிய கடற்படையில் சேர்க்கப்பட்ட 3 ஆயிரம் டன் எடை கொண்ட ‘தோசன் அன் சாங்-ஹோ’ என்ற நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு பாயும் ஏவுகணையை தென்கொரியா வீசி சோதனை செய்தது.

வடகொரியாவும், தென்கொரியாவும் ஒரேநாளில் ரயில் மற்றும் நீர்மூழ்கி கப்பலில் இருந்து சோதனை நடத்தியது கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை வீசி சோதனை செய்திருப்பது உலகில் இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தும் பலத்தை இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், வடகொரியா ஆகியவை மட்டுமே பெற்றுள்ளன. தற்போது இந்த பட்டியலில் தென்கொரியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.