அச்சுறுத்தும் நிபா வைரஸ்

323
nipah-virus
Advertisement

நிஃபா வைரஸ் பாதிப்பையொட்டி, கேரளமாநில எல்லையோரம் உள்ள 9 மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், அனைத்து பள்ளி – கல்லூரிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கிறது என்று கூறினார்.

ஆசிரியர்களும் மாணவர்களும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தமிழகத்தில் வரும் 12 -ஆம் தேதி தடுப்பூசி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது என்றும் அவர் அறிவித்தார்.

கேரளாவில் நிஃபா வைரஸ் தாக்கம் காரணமாக தமிழக எல்லைகளில் முகாம்கள் அமைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தமிழக – கேரள எல்லையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தேனி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிகள் சோதனைச்சாவடிகள் அமைத்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.