மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 6.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்ட நிலையில், வெங்கடாசலம் மீது ஊழல் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், ஓய்வு பெற்ற ஐ.எப்.எஸ்.
அதிகாரியும், மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவருமான வெங்கடாசலத்தின் சொகுசு பங்களா, அலுவலகம் என ஐந்து இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், 13.50 லட்சம் ரொக்கம், 6.5 கிலோ தங்கம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும்,வெங்கடாசலத்தின் வீட்டில் சுமார் 10 கிலோ சந்தன மரத்தாலான பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
இதுதொடர்பாக வனத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.