பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
5 ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளது.
தொலைத்தொடர்புத்துறை சார்பில் 5 ஜி அலைக்கற்றை ஏலம் விடப்படும் என்றும் ஜூலை இறுதிக்குள் 72 ஜிகாஹெர்ட்ஸ் அளவுக்கு அலைக்கற்றை ஏலம் விடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் இந்தியாவில் விரைவில் 5 ஜி சேவை நடைமுறைக்கு வரவுள்ளது.
4 ஜி சேவையை விட 5 ஜி சேவையில் பத்து மடங்கு வேகம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.