Thursday, January 15, 2026

அறிவிப்பு இல்லாமல் தொடர் விடுமுறை எடுத்த மருத்துவர்கள் 36 பேர் பணிநீக்கம்

கேரளாவில் 600க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் முறையான அறிவிப்பு இல்லாமல் பணிக்கு வராமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மருத்துவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில் அறிவிப்பு இல்லாமல் தொடர் விடுமுறை எடுத்த அரசு மருத்துவர்கள் 36 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேரை மருத்துவ சேவைகள் துறை இயக்குநர் டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளார். 3 பேர் மருத்துவக்கல்வி இயக்குநரால் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.

விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எவ்வித பதிலும் தராமல் இருந்த 17 அரசு டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. 

Related News

Latest News