உத்தரப்பிரதேச மாநிலத்தில் 2 லட்சத்து 90 ஆயிரம் மாணவர்கள் 10, 12 ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுத வராததால், அம்மாநிலக் கல்வித்துறை கவலையடைந்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக இந்தியா முழுவதும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து உத்தரப்பிரதேசக் கூடுதல் தலைமைச் செயலாளர்(இடைநிலைக் கல்வி) ஆராதனா சுக்லா கூறியபோது, கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால் தற்போது 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. ஆனால், இன்று(28/03/2022) 2 லட்சத்து 90 ஆயிரம் 10 மற்றும் 12 ஆவது வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
கடந்த 4 நாட்களில் மட்டும்7 லட்சத்து 80 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை.
ஏறக்குறைய கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மாணவர்கள் இந்த ஆண்டு தேர்வில் பங்கேற்கவில்லை. அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் தேர்வு எழுத வராததற்கான காரணத்தை ஆராய அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றார்.