நீரவ் மோடியின் 253 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

255

நீரவ் மோடியின் 253 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்ற நீரவ் மோடி, அதனை திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச் சென்றார். லண்டனில் தலைமறைவாக இருந்த நீரவ் மோடி கடந்த 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் அந்நாட்டில் கைது செய்யப்பட்டார். இங்கிலாந்து சிறையில் உள்ள நீரவ் மோடியை நாடு கடத்தி இந்தியா கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நீரவ் மோடியின் 253 கோடி மதிப்பிலான அசையும் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. நீரவ் மோடி ஹாங்காங்கில் போலி நிறுவனத்தின் பேரில் தங்கம், வைரம் மற்றும் விலையுர்ந்த ஆபரணங்கள் மற்றும் வங்கி டெபாசிட் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.