பள்ளிகளில், பாலியல் புகாரில் சிக்கிய 23 பேரை பணி நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பள்ளிக்கூடங்களில், பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. பள்ளி ஆசிரியர், ஆசிரியர் அல்லாதோர் என 46 பேர் மீது விசாரணை நடைபெற்று வந்த நிலையில், 23 பேர் மீதான குற்றம் நிரூபணமானது. இதை தொடர்ந்து அந்த 23 நபர்களையும் பணி நீக்கம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.