Friday, April 18, 2025

த.வெ.க. பொதுக்குழு கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டர் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவர் விஜய் பனையூரில் இருந்து புறப்பட்டு காலை 7.30 மணிக்கு பொதுக்குழு நடைபெறும் மண்டபத்துக்கு வந்தார்.

மண்டப நுழைவு வாயிலில் விஜய்க்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட்டம் கட்சித் தலைவர் விஜய் தலைமையில் தொடங்கியது.

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமில்லை. இருமொழி கொள்கையே இருக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ.1000 கோடி முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ள நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Latest news