1 Year Of Vikram: கோலிவுட் சினிமாவை அலற விட்ட ஆண்டவர் – லோகேஷ்: மறக்க முடியுமா…!

197
Advertisement

உலக நாயகன் கமல் நடிப்பில் வெளியாகி கோலிவுட் சினிமா வியந்து பார்க்கும் வெற்றியை படைத்த ‘விக்ரம்’ படத்தை யாராலும் மறக்க முடியாது. விஜய், அஜித் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் போட்டி போட்டுக் கொண்டிருந்த சமயத்தில், ‘கொஞ்சம் பொறுங்க தம்பி’ என பாக்ஸ் ஆபிஸை அலற விட்ட ‘விக்ரம்’ படம்.

இந்நிலையில் இந்தப்படம் ரிலீசாகி ஒரு வருடம் நிறைவு செய்துள்ளதை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

தமிழ் சினிமாவின் தற்போதைய சென்சேஷனல் இயக்குனர் என லோகேஷ் கனகராஜ் என சொல்லலாம். மிக குறுகிய காலத்தில் தளபதியை வைத்து இரண்டு படங்களை இயக்கும் அளவிற்கு நம்பிக்கைக்குரிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். முன்னணி இயக்குனராக திகழும் இவர் கமலின் தீவிர ரசிகராகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு சினிமாவில் நுழைந்தார்.

உண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதையடுத்து தனது நான்காவது படத்திலே கமலை இயக்கும் வாய்ப்பை கைப்பற்றினார் லோகேஷ் கனகராஜ். கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிப்பு அரக்கர்களை வைத்து லோகேஷின் பென் பாய் சம்பவமாக ‘விக்ரம்’ படம் உருவானது. இந்தப்படத்தின் மற்றொரு சிறப்பம்சமாக கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்சாக சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்து ரசிகர்களின் பல்சை எகிற வைத்தார்.

கடந்தாண்டு இதே தினத்தில் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது ‘விக்ரம்’ படம். இந்தப்படத்தின் அறிவிப்பே ‘ஆரம்பிக்கலாமா’ என கமலின் குரலுடன் வீடியோவாக வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது. இந்தப்படம் குறித்து வெளியான ஒவ்வொரு அப்டேட்டும் இணையத்தை தெறிக்க விட்டது. படத்திற்கு முந்தைய நாள் லோகேஷ் தனது ‘கைதி’ படத்தை பார்த்துவிட்டு வர சொன்னார். இப்போது ரசிகர்கள் அதிகம் உபயோகிக்கும் ‘LCU’ என்ற வார்த்தையை தொடங்கி வைத்ததே ‘விக்ரம்’ படம் தான்.