டெங்கு பாதிப்புகள் அதிகமுள்ள தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களுக்கு மத்திய அரசு தனது குழுவை அனுப்பியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தலை தொடர்ந்து நாடு முழுவதும் தற்போது டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது.
மொத்த பாதிப்பில் தமிழகம் உள்ளிட்ட 9 மாநிலங்களில் மட்டும் 86% பாதிப்புகள் உள்ளன.
தமிழகம், கேரளா, ஹரியானா, உத்தரகாண்ட், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், டெல்லி, ஜம்மு -காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பதிவாகி உள்ளன.
இந்நிலையில் டெங்குவை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாநில அரசுகளுக்கு உதவுவதற்காகவும், மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படவும் மத்திய அரசு தனது குழுக்களை அனுப்பியுள்ளது.
விரைவில் இந்த மத்தியக்குழு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.