ரயிலில் டிக்கெட்டை ரத்து செய்தால் இனி ஜி எஸ் டி 

329
Advertisement

முன்னதாக பலமுறை ரயிலில் டிக்கெட்களை முன்பதிவு செய்திருந்தாலும், மிக முக்கியமான காரணங்களுக்கு  மட்டுமே அதை ரத்தும் செய்வதற்கான வழிகள் இருந்தது, ஆனால் இனி ரயிலில் முன் பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்தால் ஜி எஸ் டி வரி கட்டாயம், என மத்திய அரசு அறிவித்துள்ளது. 

முதல் வகுப்பு அல்லது ஏசி வகுப்பு ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்யப்பட்டால், கட்டணத்துடன் கூடுதலாக 5 % ஜி எஸ் டி வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது, 

ரத்து கட்டணம் பதிவாளருக்குத் திருப்பி செலுத்தப்படும் தொகை என்பதால், அதற்கு ஜி எஸ் டி உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உதாரணத்திற்கு ஒரு ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் ரூ 240  வசூலித்தால், ரூபாய் 12 ஜி எஸ் டி யாக செலுத்தப்படும்.

இருப்பினும் செகண்ட் ஸ்லீப்பர் மற்றும் இருக்கை வசதிகள் கொண்ட டிக்கெட்டுகளுக்கு, இந்த ஜி எஸ் டி நடைமுறை பொருந்தாது. 

மேலும் விமானம் மற்றும் தங்குமிடம் ரத்துக்கு 5 சதவிகிதம், ஜி எஸ் டி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது,