மார்ச் 2ஆம் தேதி தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்!

365
Advertisement

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் வரும் மார்ச் 2-ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மார்ச் 2-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை,புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருநெல்வேலி,கன்னியாகுமரி, ராமநாதபுரத்தில் கனமழை பெய்யும் எனவும்

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென் தமிழகம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

தென்கிழக்கு வங்க கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் பகுதிகளுக்கு அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எங்கும் மழை பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.