பொரித்த உணவில் எலுமிச்சை சாற்றைப் பிழிவது தவறு   

305
Advertisement

உணவுகளை பொதுவாகச் சூடாக சாப்பிடுவதற்கு ஆசைப்படுவோம், அதிலும் சூடான உணவில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து சாப்பிடும் பழக்கத்தை ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகிறோம், ஆனால் இது மிகப் பெரிய தவறு என்பதை யாரும் அறியவில்லை.

இனிப்பு புளிப்புச் சுவை கலந்த எலுமிச்சையானது, பானங்கள் மற்றும் சூடான பொரித்த உணவுகள் போன்ற பல வகையான உணவுகளின் சுவையைக் கூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது, எலுமிச்சையில் இருக்கும் வைட்டமின் – சி, உடலில் இருக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மேலும் இரும்புச்சத்து உடல் சோர்வை போக்குகிறது, எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இத்தகைய சத்து மிக்க சாற்றைச் சூடான உணவுப் பொருட்கள் மீது பிழியக் கூடாது என்கிறார்கள் நிபுணர்கள். ஏனென்றால் சூட்டின் மீது எலுமிச்சை சாரின் உணர்திறன் அதிகமாக இருப்பதால், அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் சூட்டில் அழிந்து விடும்.

வைட்டமின் – சி  அல்லது அஸ்கார்பிக் அமிலமானது வெப்பம் மற்றும் வெளிச்சம் ஆகிய இரண்டிலும் பாதிக்கப்படக்கூடியது என்கின்றனர் மருத்துவர்கள், மேலும் எலுமிச்சையில் இருக்கும் சிறந்த ஆண்டி ஆக்சிடண்ட்டான (antioxidants)  ஃப்லவனாய்டுகள், (flavonoids), சூடான பொருட்களோடு சேரும்போது இதன் சத்துக்கள் அழிகிறது , இதனால் எந்த நம்மையும் உடலுக்குக் கிடைக்காமல் போகிறது. எனவே சூடான பொருள்களோடு எலுமிச்சையைச் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.