டி – 20 உலகப் கோப்பை தொடர் அக்டோபர் 16 ஆம் தேதி முதல் நவம்பர் 13 ஆம் தேதிவரை அஸ்திரேலியாவில் நடக்கிறது, மொத்தம் 16 நாடுகள் கலந்து கொள்ளும் நிலையில், சமீபத்தில் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இதில் முக்கியமான கேள்வியாக ரிஷப் பண்ட மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவருமே பிளேயிங் லவனில் இடம்பிடிப்பார்களா என்பதுதான் , இது குறித்து முன்னால் இந்திய கேப்டன் கவுதம் கம்பீர் தெளிவாகப் பேசியுள்ளார்.
அவர் கூறியது ரிஷப் பண்ட மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இருவரையுமே சேர்த்து அணியில் ஆடவைக்க முடியாது, அப்படிச் செய்தால் 6வது பந்து வீச்சாளரை இழக்க வேண்டியது இருக்கும், ஆனால் உலகக்கோப்பைபோல பெரிய தொடரில், 6 வது பந்துவீச்சாளர் இல்லாமல் போகமுடியாது. அப்படி இருவரையும் அணியில் ஆடவைக்க வேண்டுமானால், சூரிய குமார் அல்லது ராகுலை டிராப் செய்துவிட்டு , ரிஷப் பண்டை தொடக்க வீரராகக் களம் இறக்கலாம்.
வெறும் 10 – 12 பந்துகள் மட்டுமே பேட்டிங் ஆடும் வீரரான தினேஷ் கார்த்திகை எப்படித் தேர்வு செய்வீர்கள் . அதுபோல ஓப்பனிங்கிலும் கார்த்திக்கை விளையாட வைக்க முடியாது, எனவே ரிஷப் பண்டிற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்றார் கம்பீர்.