தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக அங்கீகரிக்க முடியாது என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தாலிபன்கள் தங்கள் வசமாக்கிக் கொண்டனர்.ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் அரசோடு நட்புறவாக செயல்படத் தயார் என அண்டை நாடான சீனா அறிவித்துள்ளது.
இந்நிலையில், கனடா நாட்டு சட்டத்தின்படி தாலிபன்கள் தீவிரவாதிகளே என அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார்.
எனவே தாலிபான்களை ஆப்கானிஸ்தான் அரசாக கனடா ஏற்காது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் உள்ள கனடா நாட்டினரை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்பதிலேயே தங்களின் முழு கவனம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
வெளிநாட்டினர் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதை தாலிபான்கள் தடுக்கக்கூடாது என்று ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.