தற்போது அணைத்து விதமான மக்களும் பல்வேறு சமூகவலைதள, ஆப்ஸ்களை அன்றாடம் பயன்படுத்தி வருகிறார்கள், குறிப்பாக இளைஞர்கள் அதிகம் பயன்படுத்தும் ஆப்பாக இன்ஸ்டாகிராம் இருக்கிறது, இதில் ஒரு புதிய அம்சம் விரைவில் வரவுள்ளது, எனவே சமூக ஊடகங்களில் மறு ட்வீட் செய்யும் கருத்து ட்விட்டரின் ரீட்வீட் அம்சத்திலிருந்து உருவானது.
இதுபோலவே இன்ஸ்டாகிராம் பயனர்கள் விரைவில் மற்றவர்களின் போஸ்ட் மற்றும் ரீல்களை ரீ- போஸ்ட் செய்ய முடியும், மெட்டாவிற்குச் சொந்தமான நிறுவனம் இதுவரை ரீ – போஸ்ட் அம்சத்தை பொதுவில் வெளியிடவில்லை என்றாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்களுடன் விரைவில் அதைச் சோதிக்கத் திட்டமிட்டுள்ளது.
சோதனை வெற்றியடைந்தவுடன் அது அனைத்து பயனர்களுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம், இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மற்றும் ios ஆகிய இரண்டு பதிப்புகளுக்கும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த repost அம்சம் ஒருவரின் உள்ளடக்கத்தை விளம்பரப்படுத்த உதவும் என்றாலும், சில பயனர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தலாம்.
இந்த அம்சம் அனைவருக்கும் எப்போது வரும் என்பது குறித்து, உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் ரீ – போஸ்ட் செய்யும் அனைத்து போஸ்ட்டுகளும், தனிப் பிரிவாக ப்ரொபைல் பேஜில் tag – க்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.