மேற்கு வங்க மாநிலத்தில் ஆசிரியர் ஒருவர், சாலைகளை பள்ளிகளாக மாற்றி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
மேற்கு வங்கத்தில் பழங்குடியின மக்கள் வசிக்கும் ஜோபா அட்பரா என்ற சிறிய கிராமத்தில், ஆசிரியர் தீப் நாராயண் நாயக் என்பவர், சாலைகளை பள்ளிகளாக மாற்றி, சுவர்களை கரும்பலகைகளாக பயன்படுத்தி மாணவர்களுக்கு பாடம் நடத்தி வருகிறார்.
முகக்கவசம் அணிவது, சுத்தம் பேணுவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்ற சமூக பாடங்களையும் கற்று தருகிறார்.
இது தொடர்பாக பேசிய ஆசிரியர், பழங்குடியின மாணவர்கள் கல்வி வாய்ப்பை இழப்பதை தவிர்க்கவும், ஆடு, மாடு மேய்க்க போவதை தடுக்கவும் இப்பணியை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.