நமது உடலில் ஏற்படும் பரிணாம மாற்றங்களுக்கு ஹார்மோன்கள் காரணமாக இருக்கிறது, எனவே எந்த ஹார்மோன்கள் எப்படி செயல்படுகிறது, என்பதை இந்த வீடியோவில் பார்க்கலாம். அட்ரினலின் சுரப்பின்போது வெளியாகும் ஹார்மோன்கள், இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் வளர்ச்சி மாற்றம் ஆகிய வற்றில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆல்டோஸ்டிரோன் என்கின்ற ஹார்மோன்கள் உடலின் உப்பு மற்றும் நீர் சமநிலையைக் கட்டுப்படுத்துகிறது,
கார்டிசோல் அட்ரீனல்கள் மன அழுத்த பதிலில் பங்கு வகிக்கிறது, குளுகோன்கன் இரத்த குளுக்கோஸ் மற்றும் சக்கரை அளவை அதிகரிக்க உதவுகிறது.
பொதுவாக இன்சுலின் ஹார்மோன்கள் குறைபாடு இருப்பதினால்தான், உடலின் இரத்த குளுக்கோஸ் அளவை குறைப்பதற்காக , இன்சுலின் மருந்துகளை எடுத்துக் கொள்கிறோம். இது உடலின் குளுக்கோஸ் அளவை குறைக்கக் கூடியது.
லுடினைசிங் ஹார்மோன் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் உற்பத்திக்கு உதவியாக இருக்கிறது, ஆ க்ஸிடோசின், பாலூட்டுதல் பிரசவம் மற்றும் தாய், சேய் பிணைப்பிற்கு உதவிக்கரமாக இருக்கிறது.
பாராதைராய்டு ஹார்மோன்கள் எலும்புகள் மற்றும் இரத்தத்தில் கால்சியம் அளவை கட்டுப்படுத்துகிறது, புரோஜெஸ்ட்டிரோன் முட்டை கருவுற்றவுடன் உடலைக் கர்ப்பத்திற்கு தயார்படுத்த உதவுகிறது.