ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை அகற்ற அனுமதி அளிக்க இயலாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மேலாளர் தாக்கல் செய்த மனுவில், ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்காக உபயோகப்படுத்தப்பட்ட கழிவுகளை வெளியேற்றவும், இயந்திரங்களை சரி செய்யவும், உள்ளூர் உயர்மட்டக்குழு மற்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் அனுமதி கேட்கப்பட்ட நிலையில், அனுமதி கிடைக்கவில்லை.
எனவே, ஆக்சிஜன் தயாரிப்பதற்காக உபயோகப்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள், கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்றவும், தொழிற்சாலையில் முன்பு இருந்த மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகள் ஆகியவற்றை வெளியேற்ற அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சீவ் பனர்ஜி மற்றும் துரைச்சாமி, முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, பிரதான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், கழிவுகள் மற்றும் மூலப்பொருட்களை அகற்ற அனுமதி அளிக்க இயலாது என, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வேதாந்தா நிறுவனம் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டது. இதையேற்ற நீதிபதிகள், வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.