விராட் கோலியின் 9 மாத குழந்தைக்கு பாலியல் மிரட்டல்

402
Advertisement

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் ஒன்பது மாத மகளுக்கு, சமூக வலைதளத்தில் மிரட்டல் விடுத்த நபரை, டெல்லி போலீசார் தேடி வருகின்றனர்.

விராட் கோலி மற்றும் பாலிவுட் நடிகை அனுஷ்கா தம்பதியரின் 9 மாத மகளுக்கு, டுவிட்டரில் மர்ம நபர் ஒருவர் மிரட்டல் விடுத்திருப்பது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில், பாகிஸ்தான் அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தததால், விராட் கோலிக்கு இந்த மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஆட்டத்தில் இந்திய வீரர் முகமது ஷமியின் பந்து வீச்சை விமர்சித்த நபர்களுக்கு எதிராக, விராட் கோலி கருத்து தெரிவித்து இருந்தார்.

இதனால் மிரட்டல் விடுத்துள்ளது தெரியவந்துள்ளது.

இந்த பிரச்சனையை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள டெல்லி பெண்கள் ஆணையம், இது தொடர்பான முதல் தகவல் அறிக்கை மற்றும் விசாரணை நடவடிக்கைகளை தங்களுக்குத் தெரியப்படுத்துமாறு, டெல்லி போலீசாரைக் கேட்டுக்கொண்டுள்ளது.