மும்பைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

517
Advertisement

மும்பையில் பெய்து வரும் கனமழை காரணமாக, தானே மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடம் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 8 இருசக்கர வாகனங்கள் சேதமாகின.

தானே மற்றும் பல்கர் ஆகிய மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் மரங்களும் முறிந்து விழுந்தன. இதே போல், பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

மும்பையில் பலத்த மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதால் நாசிக், செம்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதை காண முடிகிறது.

அம்பெர்மாலி ரயில் நிலையத்திற்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், இகத்புரியா, கார்தி இடையேயான ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே, மும்பையில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. ஆக்ரோஷமாக எழுந்த அலையால் மும்பை வாசிகள் அச்சம் அடைந்தனர்.