முதல்வர் ரங்கசாமியுடன் ஐசரி கணேஷ் சந்திப்பு…

170
Advertisement

புதுச்சேரியில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை கைப்பற்ற பா.ஜ.க – என்.ஆர் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழலில், புதுச்சேரி முதலமைச்சரை  ஐசரி கணேஷ் சந்தித்தது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் நாடாளுமன்ற மாநிலங்களை பதவிக்கான தேர்தல், அடுத்த மாதம் 4ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களை பதவியை கைப்பற்ற பா.ஜ.க – என்.ஆர் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வழக்கம்போல் மௌனம் காத்து வருவதால், புதுச்சேரி கூட்டணி அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை,  ஐசரி கணேஷ் நேற்று சந்தித்து பேசினார்.

இதனால், புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினர் பதவி ஐசரி கணேஷிற்கு வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளதால், புதுச்சேரி அரசியலில் மேலும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.