பொதுவாகக் காலை மற்றும் மத்திய உணவுடன் முட்டை சாப்பிட விரும்புபவர்கள் அதிகம் உண்டு, ஆனால் ஒரு நாளில் அதிகப்படியான முட்டை எடுத்துக்கொள்வது நம் ஆரோக்கியத்திற்குத் தீங்கு விளைவிக்கிறது
ஒரு நாளைக்கு ஒரு முட்டை எடுத்து கொள்வது உண்மையிலேயே ஒரு சூப்பர் ஃபுட், அதுவே அதிகமானால் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது,
முட்டையில் புரதம், வைட்டமின் டி, பி 12 மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருக்கிறது, இதில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருந்தாலும் உண்ணும் போது கவனமாக இருக்கவேண்டும்,
அதிகப்படியான முட்டையைச் சாப்பிடும்போது வயிற்றுப் போக்கு அபாயம் ஏற்படுகிறது, மேலும் செரிமான அமைப்பைப் பாதித்து மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது,
அதிலும் கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் முட்டையைக் குறைவாகச் சாப்பிடுவது நல்லது, இல்லை என்றால் உடலில் கொலஸ்ட்ரால் உற்பத்தி அதிகரித்து, உடலில் சக்கரையின் அளவும் அதிகரிக்கிறது.
அதிக புரதம் முட்டையில் இருப்பதால், அதை உட்கொள்ளும்போது கலோரிகள் அதிகரித்து உடலைச் சமநிலைப்படுத்த முடியாமல் உடல் எடை கூடுகிறது.