ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய போலந்து வீராங்கனை மரியா ஆண்ட்ரிஜெக்கின் உன்னத சேவைக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அண்மையில் நடந்து முடிந்த டோக்கியோ ஒலிம்பிக் தொடர் ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற போலாந்து நாட்டைச் சேர்ந்த மரியா ஆண்ட்ரிஜெக், அதே நாட்டைச் சேர்ந்த 8 மாத குழந்தையின் அறுவை சிகிச்சை செலவுக்காக தனது பதக்கத்தை ஏலம் விடுத்துள்ளார்.
இந்நிலையில்தான், 8 மாத குழந்தைக்கு இதயத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அறுவை சிகிச்சை செய்ய பணம் தேவைப்பட்டுள்ளதை அறிந்த மரியா, தான் வென்ற பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.
மரியா விடுத்த ஏலத்தை வென்ற சப்கா போல்ஸ்கா என்ற நிறுவனம், ஒரு லட்சத்து 25 ஆயிரம் யூரோ டாலர்களை அளித்து பதக்கம் வேண்டாம் என மரியாவுக்கே திரும்ப கொடுத்துவிட்டது.
ஒலிம்பிக் பதக்கத்தை விற்று புற்று நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உதவிய மரியாவின் சேவையையும், ஏலத்தில் வென்று பதக்கத்தை திருப்பி கொடுத்த நிறுவனத்திற்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றது.