மனிதரைக் கடித்து குதறிய சிங்கம் 

303
Advertisement

உலகில் பல விதமான உயிரியல் பூங்கா இருக்கிறது, ஆனால் அவை அனைத்தும் மக்களை விலங்குகள்  தாக்காத படி மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறது, இருப்பினும் பாதுகாப்புகளை மீறி வனவிலங்குகளிடம்  நெருங்கும் மனிதர்களை விலங்குகள் தாக்குகிறது, அதுபோல  சிங்கம் ஒன்று மனிதரைக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியைத் தந்துள்ளது,

மேற்கு ஆப்பிரிக்க நாடான, கானாவின் தலைநகர் அக்ராவில், அன் நாட்டின் தேசிய  உயிரியல் பூங்கா உள்ளது, வழக்கம் போல் இந்த உயிரியல் பூங்காவில் பல பார்வையாளர்கள் வந்த நிலையில், அப்போது சிங்கங்கள் அடைத்து வைத்திருக்கும் பகுதிக்குள் சென்ற ஒருவர், திடீரென வேலியைத் தாண்டி, சிங்கங்கள் இருக்கும் பகுதிக்குள் குதித்தார். 

இதைக் கண்டு அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்,  உயிரியல் பூங்கா அதிகாரிகள் விரைந்து வந்து சிங்கங்களிடம் இருந்து அவரை காப்பாற்றச் சென்றனர், ஆனால் அதற்குள் ஒரு சிங்கம் அவரை கடித்துக் குதறியது, அப்போது பரிதாபமாகச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.