தொடர் தோல்விகளுக்கு பிறகு வெற்றி! வெளிச்சம் பெற்றது சன்ரைசஸ்!

410
Advertisement

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

டாஸ் வென்று முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 57 பந்தில் 82 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. சிறப்பாக ஆடிய தொடக்க வீரர் ஜேசன் ராய் 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் வில்லியம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். இறுதியில் ஐதராபாத் அணி 18.3 ஓவரில் இலக்கை எட்டி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

அதன்படி, இன்று பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெற உள்ள முதல் போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 2வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.