தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு…

227
Advertisement

புதுச்சேரியில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 30ஆம் தேதி நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதிய தளர்வாக வணிக நிறுவனங்கள், மதுகடைகள் உட்பட அனைத்து கடைகளும் இரவு10 மணி வரை இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இரவு 10.30 மணி முதல் காலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக மற்றும் பொழுதுபோக்கு தொடர்பான நிகழ்வுகளுக்கு தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது. அனைத்துவித கடைகள், வணிக நிறுவனங்கள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை, குளிர்சாதன வசதியின்றி இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வித உணவகங்கள், தங்கும் விடுதிகள், மதுக்கூடங்களுடன் கூடிய விடுதிகளில், இரவு 11 மணி வரை, 50 சதவீதம் பேர் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேநீர் கடைகள், பழச்சாறு நிலையங்கள் இரவு 11 மணி வரை இயங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.