இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா ஆசியக் கோப்பையில் ஏற்பட்ட முழங்கால் காயத்தால் தொடரிலிருந்து வெளியேறினார், எனவே காயம் அதிகரித்ததை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்க்கொள்ள முடிவெடுக்கப்பட்டது, எனவே அவரின் முழங்காலில் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்துள்ளது.
இருப்பினும் டி – 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜடேஜா இடம்பெறவில்லை, ஏனெனில் அவர் காயத்திலிருந்து இன்னும் குணமாகவில்லை, எனவே ஜடேஜா அணியில் இல்லாததால் அவரின் முக்கியத்துவம் குறித்து இத்தொகுப்பில் பார்க்கலாம்.
4 வது அல்லது 5 வது இடத்தில் ஜடேஜா மிக சிறப்பாகச் சமீபத்தில் பேட்டிங் செய்துவந்தார், அதுபோல சிறப்பான ஆல்ரவுண்டராக பாண்டியா மற்றும் ஜடேஜா திகழ்ந்தனர், இதனால் இந்திய அணி எல்லாவகையிலும் மிக பலம் வாய்ந்த அணியாக இருந்தது. குறிப்பாக பேட்டிங் ஆடரில்
அதிலும் 4 வது இடத்தில் இடதுகை பேட்ஸ்மேன் கட்டாயம் வேண்டும் என்று இந்திய அணி எதிர்பார்த்த நிலையில் , ஜடேஜா அந்த இடத்தில் கச்சிதமாகப் பொருத்துவார் , ஆனால் ஜடேஜா இல்லாததால் அந்த இடத்திற்கு பந்த் (Pant ) சரியாக இருப்பாரா என்பது கேள்வி குறியாகிவிட்டது.
டி -20 உலக கோப்பையில் ஜடேஜா இல்லாதது இந்திய அணிக்குப் பின்னடைவுதான், சமீபத்தில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் நல்ல நிலையில் இருந்தார், எனவே இந்திய அணியில் ஜடேஜா இல்லாததைக் குறித்து கமெண்டில் சொல்லுங்கள்.